டெங்கு பரவுவதை தடுக்க சுகாராணியாளர்கள் விழிப்புணர்வை கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும் என கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் ஒன்றிய பெரும் தலைவர் தமிழ்செல்வி போஸ் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய பெரும் தலைவரி தமிழ்செல்வி போல் தலைமையில் ஆனையாளர் மணிமேகலை முன்னிலையில் நடைபெற்றது மேனேஜர் முத்துராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பெரும் தலைவர் தமிழ்செல்வி போஸ் பேசியதாவது: மழை காலம் தொடங்கிவிட்டன ஆனால் போதுமான மழை பெய்யவில்லை. விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிராமப்பகுதிகளில் காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் நல்ல தண்ணீரில் தான் ஷ்டதியாகிறது. கமுதி யூனியனில் 30 பேரை சுகாதாராணியாளர்களாக நியமனம் செய்து சம்பளம் வழங்கிவருகிறோம்/” சுகாதார பணியாளர்கள் கிராமங்களுக்கு வருகிறார்களா எனபதை கவுன்சிலர்கள் கண்காணிக்க வேண் டும்.இவ்வாறு பேசினார். முடிவில் ஆனையாளர் மணிமேகலை நன்றி கூறினார்.