9வது தேசிய அளவிலான சப் ஜூனியர் மற்றும் 2வது மிக்ஸ்டு சப் ஜூனியர் இலக்குப்பந்து போட்டியானது மகாராஷ்டிரா மாநிலம் சாய் நகர், ஷீரடியில் நடைபெற்றது. இதில் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஹரியானா, தெலுங்கானா, குஜராத், மற்றும் மத்திய பிரதேஷ் ஆகிய 14கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து இலக்குப்பந்து வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியானது 02 அக்டோபர் 2023 முதல் 06 அக்டோபர் 2023 வரை நடைபெற்றது. இதில் 2வது சப் ஜூனியர் கலப்பு பிரிவில் தமிழக அணி சார்பில் நேஷ்னல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி , ராஜந்தாங்கல் – ஐ சார்ந்த மாணவர்கள் ஷரன்ராய், தீபக் , லோகேஷ் , மோனிஷ் , பாலமுருகன் , லியோ செபஸ்டின், ஆகாஷ் , கிருஷ்ணா ,
சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி இரண்டாம் இடம் பிடித்தனர் மற்றும் சிறந்த ஆட்டநாயகனாக ஷரன்ராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெள்ளி பதக்கம் மற்றும் கோப்பையுடன் தமிழகம் திரும்பிய இலக்குப்பந்து வீர வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் சந்தன மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதில் ஆண்கள் அணியை காட்பாடி ரயில் நிலையத்தில் வேலூர் மாவட்ட இலக்குப்பந்து பொதுச் செயலாளர் எம் கே சூர்யா தலைமையிலும் மற்றும் மகளிர் அணியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுர மாவட்ட இலக்குப்பந்து கழகத்தின் தலைவர் ஜெயசூர்யா அவர்களின் தலைமையிலும் வரவேற்பு அளித்தனர். வெற்றி பெற்ற வீராங்கனை இலக்குப்பந்து கழகத்தின் தலைவர் சசிகுமார் மற்றும் கழக உறுப்பினர்கள் மற்றும் மாநில பொதுச்செயலாளர் முனைவர் ஜமால் ஷரிப் கபாநன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.மேலும் வெற்றி பெற்ற நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளித் தலைவர் சரவணன் பள்ளித் தாளாளர் செந்தில் குமார் பள்ளி முதல்வர் . ஜெரால்டு ஆனந்த் , உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ்குமார், லூர்து மரிய ஜோசப் மற்றும் பயிற்சியாளர் பிரேம்குமார் , பெண் பயிற்சியாளர் தங்கஜெபா ஆகியோர் பாராட்டினார்கள்..