ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சி குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் சமரசம் செய்தும் ஏற்காததால் சிக்கல் போலீஸ் ஸ்டேசனில் வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.சிக்கல் நெடுஞ்சாலையில் நடைபெற்ற காலை மறியல் போராட்டத்திற்கு தாலுகா இ கம்யூனிஸ்ட் செயலாளர் அம்ஜத்கான் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மவெட்ட செயற்குழு மயில்வாகனன், முத்துராமு ஆகியேரர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர கே.பக்கமால் அனைவரையும் வரவேற்றார். கடற்கரை சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சமரச முயற்சி: கடலாடி தாசில்தார் ரெங்கராஜ், கீழக்கரை டிஎஸ்பி சுதிர் லால் ஆகியோர் தலைமையில் சிக்கல் ஊராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறி அழைத்துச் சென்றனர். ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் வராததால் போராட்டக்காரர்கள் சமரச பேச்சில் கலந்துகொள்ளாமல் வெளியேறினார்கள். போலீஸ் ஸ்டேசனில் பேசிக்கொள்வோம் என்டிஎஸ்பி சுதில்லால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துச் சென்று அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன்பேரில் மறியல் செய்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.