செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் சீவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறையின் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் சீவாடி ஊராட்சியில் கிராம அளவிலான பாதுகாப்பு குழு நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு குறித்த விளக்க உரை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சீவாடி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் ச. அரங்கநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூக பாதுகாப்பு துறையின் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் புறத்தொடர்பு பணியாளர் ரோஜா அவர்கள் கலந்து கொண்டு முதலாவதாக கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் நிர்வாகிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். கிராம அளவிலான பாதுகாப்பு குழுவின் தலைவராக சீவாடி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் ச. அரங்கநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதன் செயலராக சீவாடி ஊராட்சி மன்ற செயலர் இந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இதன் உறுப்பினர்களாக வார்டு உறுப்பினர் லலிதா அருள், பள்ளியை சார்ந்த உறுப்பினராக சீவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா அவர்களும் கிராம உறுப்பினராக கிராம அலுவலர் சசிகுமார் அவர்களும், அங்கன்வாடி உறுப்பினர்களாக செல்வி மற்றும் அற்புதம் அவர்களும் சுய உதவி குழுக்களின் உறுப்பினர்களாக மீனா மற்றும் லலிதா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் குழந்தைகள் பாதுகாப்பை குறித்த தீர்மானங்கள் விவாதித்து நிறைவேற்றப்பட்டது. இனி வரும் காலங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தப்படும் என கூட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரும் சீவாடி ஊராட்சியை குழந்தைகள் பாதுகாப்பு நிறைந்த ஊராட்சியாக மாற்றுவோம் என்று உறுதி கொண்டனர். இவ்விழாவில் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.