விளாத்திகுளம் அருகே பொது பாதையை காவல்துறை அதிகாரி ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிதம்பரநகர் ஊர்த்தலைவர்  செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு “சிதம்பரநகர் பகுதியில் சித்தவநாயக்கன்பட்டி கிராம் பிளாட்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவர் என்பவர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அவரது பிளாட் பக்கம் உள்ள ரோட்டில் 5 அடியை ஆக்கிரமித்து கல், செடி வைத்துள்ளார். 

ரோட்டில் ஆக்கிரமித்து செய்துள்ளதால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆக்கிரமிப்புகனை அகற்ற சொன்னால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது உங்களால் முடிந்ததை பாருங்கள் என்றும் ஏதாவது செய்தால் எல்லாரையும் உள்ளே தள்ளி விடுவேன் என்று அச்சுறுத்தி வருகிறார். இவர் காவல் துறையில் பணியில் இருப்பதால் இவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பொது மக்கள் புகார் அளிக்க அச்சப்படுகிறார்கள். ஆகவே கனம் மாவட்ட ஆட்சியாளர் இது தாெடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.