திருவள்ளூர் மாவட்டம்,காட்டுப்பள்ளி,சென்னை துறைமுக டிரைலர்கள் மற்றும் லாரிகள்,டேங்கர்கள்,வேன்கள் உள்ளிட்ட சுமார் 1 இலட்சம் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர்.
40% காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.ஆன்லைன் முறையில் லாரிகளுக்கு வழக்குப்பதிவதை ரத்து செய்ய வேண்டும்,வடசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில்
பார்க்கிங் டெர்மினல் அமைத்து கொடுக்க வேண்டும்,நிலுவையில் உள்ள ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்டார்குப்பம் செக்போஸ்ட் அருகே சென்னை மற்றும் சுற்றுவட்டார மோட்டார் வாகன சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட லாரி உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அரசுத்துறை சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.