
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், CNG
வாகனங்களை மிகவும் விரும்பத்தக்கதாகவும், நடைமுறைக்கு ஏற்பவும் மாற்றுவதன் மூலம் ஒரு முன்னோடித்துவ நகர்வை மேற்கொண்டுள்ளது. அதன் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்துடன், டாடா மோட்டார்ஸ் CNG-மூலம் இயங்கும் வாகனங்களில் இனி சமரசம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது. இந்த உத்திசார் முடிவு, டாடா மோட்டார்ஸின் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பையும், நாட்டில் CNG வாகனங்களின் வளர்ந்து வரும்
பிரபலத்தை அங்கீகரிப்பதையும் பிரதிபலிக்கிறது.
கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், CNG கார்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளன, குறிப்பாக தனிப்பட்ட வாகனப் பிரிவில். இந்த குறிப்பிடத்தக்க எழுச்சிக்கு இரண்டு முக்கிய காரணிகள் உள்ன. அவை, பல்வேறு மாடல்கள் கிடைப்பது மற்றும் மற்றும் விரிவடைந்து வரும் உள்கட்டமைப்பு ஆகியவைகளாகும். இந்திய சந்தையில் இப்போது பல்வேறு வகையான CNG மாடல்கள் உள்ளன, தோராயமாக 17-18 வகைகள் வெவ்வேறு
வடிவமைப்புகளிலும் விலைப் புள்ளிகளிலும் கிடைக்கின்றன, அவை பல்வேறு அசல் உபகரண
உற்பத்தியாளர்களால் (OEMs) வழங்கப்படுகின்றன. CNG வாகன உரிமையாளர்களுக்கு நீடித்த குறைந்த இயக்கச் செலவை வழங்கும் பெட்ரோல் விலைகளுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க விலை வேறுபாடு உள்ளது. நாடு முழுவதும் CNG எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் பெருக்கம் ஒரு புரட்சிகரமான காரணியாக அமைந்துள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 1,500 நிலையங்கள் இருந்தன; இன்று அந்த எண்ணிக்கை சுமார் 5,500 ஆக
உயர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஹரியானா, டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் CNG வாகனங்களை ஏற்றுக்கொண்டது, இந்த பிராந்தியங்களில் ஆழமான சந்தை ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ளன.
இந்த இரண்டு காரணிகளும் CNG பிரிவின் ஈர்க்கக்கூடிய வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன, மூன்று ஆண்டுகளில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) 35% மற்றும் ஆண்டு வளர்ச்சி விகிதம் 52% ஆகும். முந்தைய ஆண்டில் மட்டும், சந்தையில் 4 லட்சம் CNG கார்கள் விற்பனையாகியுள்ளன, டாடா மோட்டார்ஸ் சுமார் 50,000 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
கடுமையான உமிழ்வுத் தேவைகள் மற்றும் CAFÉ விதிமுறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், டாடா மோட்டார்ஸ் மல்டி-பவர்டிரெய்ன் உத்தியை ஏற்றுக்கொண்டது. நிறுவனம் ஏற்கனவே அதன் Tigor மற்றும் Tiago மாடல்களுக்கு CNG விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அந்தந்த பிரிவுகளில் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 40% ஆகும். Altrozஸின் அறிமுகம் iCNG பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் ஒரு வெற்றிடத்தை நிரப்புகிறது. மேம்படுத்தப்பட்ட பூட் ஸ்பேஸிற்கான இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பம் மற்றும் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ்
சார்ஜர் போன்ற செய்திட்ட அம்சங்களைக் கொண்ட, சமரசமற்ற தரத்திற்கான டாடா மோட்டார்ஸின்
அர்ப்பணிப்புக்கு இந்த சலுகை ஒரு சான்றாகும். இந்திய வாகனத் துறையில் தற்போது CNG ஊடுருவல் 15% ஆக உள்ளது, தொழில் வல்லுநர்கள் பத்தாண்டுகளின்
முடிவில் அதன் சூழலுக்கு நட்பார்ந்த தன்மை காரணமாக இது 20-25%க்கு மாறும் என்று எதிர்பார்க்கிறார்கள். அனைத்து OEM களும் CAFÉ நெறிமுறைகளை சந்திக்க வேண்டிய அழுத்தத்தில் உள்ளன, மேலும் CNG-ஐ ஏற்றுக்கொள்வதை மேலும் வலுப்படுத்துகிறது.
டாடா மோட்டார்ஸின் மல்டி-பவர்டிரெய்ன் உத்தி, பல்வேறு CNG மாடல்கள் கிடைத்தல் மற்றும் விரிவடைந்து வரும் CNG ஃபில்லிங் ஸ்டேஷன்களின் நெட்வொர்க் ஆகியவை அனைத்தும் CNG பிரிவின் எழுச்சிக்கு பங்களித்துள்ளன. தற்போது, சுமார் 52,000 CNG வாகனங்கள் மாதந்தோறும் விற்பனை செய்யப்படுகின்றன, தனியார் கார் வாங்குபவர்கள் இந்த விற்பனையில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ளனர்.டாடா மோட்டார்ஸ் இந்திய நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதுமையான,சுற்றுச்சூழல் நட்பு மற்றும் ஆர்வமுள்ள வாகனங்களை வழங்குவதில் உறுதியுடன் உள்ளது.