26 பிப்ரவரி 2026 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள SIPCOT தொழிற்பேட்டை வளாகத்தில் புதிய உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
ADATA Semiconductor Private Limited நிறுவனம் மேற்கொள்ளும் இந்தத் திட்டம் ரூ. 931 கோடி முதலீட்டில் உருவாகிறது. இந்தத் தொழிற்சாலை 823 உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் சர்வர்கள் பயன்பாட்டிற்கான DRAM நினைவக மாட்யூல்கள் மற்றும் Flash Drive போன்ற உயர்தர சேமிப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சி முழுமையாக Helinto Events & Travels Private Limited நிறுவனத்தினால் சிறப்பாக திட்டமிட்டு நடத்தப்பட்டது. இந்நிகழ்வை நிறுவன இயக்குநர் திரு. ராஜ் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. தினேஷ் நேரடியாக மேற்பார்வை செய்தனர்.
