திருவள்ளூர் வடக்கு மாவட்டம்,சோழவரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் ஆண்டார்குப்பத்தில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான பொன்னையன் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.சோழவரம் ஒன்றியக் கழகச் செயலாளர் பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பஞ்செட்டி நடராஜன்,மாவட்ட அவைத் தலைவர் பொன்னுதுரை,மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ்,மாவட்ட மீனவர் அணி செயலாளர் மாங்கோடு மோகன்,மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எஸ்.பி. அருள்,கழக நிர்வாகிகள் பஞ்செட்டி சீனிவாசன்,சுமித்ரா குமார்,கோளூர் கோதண்டன்,வட்டச் செயலாளர் காமராஜ்,பஞ்செட்டி செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.