
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இந்து கார்னேசன் நடுநிலைப்பள்ளியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகள் தின விழா வெகு சிறப்பாக குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்துகின்ற வகையில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது மேலும் இந்நிகழ்வில் போதைப் பொருட்கள் ஒழிப்பு குழந்தை திருமணம் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு கலை நிகழ்வின் மூலம் நடித்து காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா வரவேற்றார் மேலும் திட்ட மேலாளர் வெங்கடேசன் ஓவியம் வரைதல் தொடர்பான விளக்கம் அளித்த ஓவிய போட்டியை காவல் உதவி ஆய்வாளர் தேவன் மற்றும் நல்லாசிரியர்மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் . மதிமோகன் துவக்கி வைத்தனர் இந்நிகழ்வில் ஒன்றிய மேலாளர்கள் . வேலு செல்வராஜ் கீதாலட்சுமி சகோதரி செல்வி தேன்மொழி மற்றும் கலைக்குழு மேலாளர்கள் செல்வம் குணசேகரன் டி சி பி யூ ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரோஜா கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர் ஓவிய போட்டியில் பரிசு பெறும் மாணவர்களுக்கு 14.11.2023 குழந்தைகள் தினத்தன்று மாவட்ட ஆட்சியர் மூலமாக பரிசுகள் வழங்கப்பட உள்ளது இறுதியாக குழந்தைகள் தின விழா மற்றும் ஓவிய போட்டியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவர்கள் சிறப்பு விருந்தினர்கள் கலைக்குழு நண்பர்கள் அனைவருக்கும் மதுராந்தக முதுநிலை ஒன்றிய மேலாளர் கோகிலா நன்றியுரை வழங்கி விழா இனிதே நிறைவுற்றது.