
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சுகாதார தொழில்நுட்ப
நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் லைப்சைன்ஸ் அதன் முன்னோடி தொழில்நுட்ப தீர்வை
அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது, இத்தீர்வு, நோயாளி வீட்டில் இருந்தாலும் சரி, ஆம்புலன்சில்
இருந்தாலும் அல்லது மருத்துவமனையில் இருந்தாலும் நோயாளியின் தரவை மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு தடையின்றி அளிக்கிறது. லைப்சைன்ஸ் அடுத்த 1000 நாட்களில், இந்தியா
முழுவதும் உள்ள 1000 கிராமப்புற மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் தொலைநிலை நோயாளி
கண்காணிப்பு தீர்வுகளை வழங்கவுள்ளது.
ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க் சேவைகளின் முன்னணி வழங்குநரான ரெயில்டெல் கார்ப்பரேஷனுடன்ஒரு மூலோபாய கூட்டாண்மையையும் லைப்சைன்ஸ் அறிவித்தது. 62,000 கிமீக்கு மேற்பட்ட தூரத்தில் ரெயில்டெல் ஆப்டிக் ஃபைபர் கேபிள் வலையமைப்பைப் பயன்படுத்தி, கிராமப்புற இந்தியா முழுவதும் மேம்பட்ட இணைப்பை வழங்குவதற்காக, நோயாளிகளின் தொலைநிலை கண்காணிப்பை LifeSigns செயல்படுத்துகிறது.
லைப்சைன்ஸ் -இன் நிறுவனர் மற்றும் CEO-ஆன ஹரி சுப்ரமணியன் பேசுகையில், “லைப்சைன்ஸ்-இல், நோயாளிகளின் முக்கிய தரவு, சரியான நேரத்தில் அணுகக்கூடியது மற்றும் குறைந்த செலவை கொண்டுளது மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய நெக்ஸ்ட் ஜென் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்தால் நாங்கள்
உந்தப்பட்டுள்ளோம். இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களை விட கிராமப்புற மற்றும்
தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் 2-3 மடங்கு அதிக தடுக்கக்கூடிய இறப்பு விகிதத்தை
எதிர்கொள்கின்றனர். ஒரு நோயாளியின் ஒரு இதயத் துடிப்பைக் கூட தவறவிடாமல், இந்தியாவின்
மிகத் தொலைதூர கிராமப்புற மூலைகளில் திறம்பட செயல்பட, மேம்பட்ட எச்சரிக்கை அல்காரிதம்
மூலம் எங்கள் தொழில்நுட்ப தீர்வு இயங்குகிறது, இதுவே இதனை தனித்துவமாக்குகிறது.
அனைவருக்கான சமமான சுகாதார அணுகலை உறுதி செய்வதற்கான எங்கள் நோக்கத்தில் இது
மற்றொரு செயற்படியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். என்று கூறினார்.
ரெயில்டெல் உடனான கூட்டாண்மை குறித்து அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் மிகப்பெரிய
தொலைத்தொடர்பு நெட்வொர்க் உள்கட்டமைப்பு வழங்குநர்களில் ஒன்றான ரெயில்டெல் உடனான
கூட்டாண்மை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் கூட்டாண்மையின் மூலமாக RailTel-
இன் விரிவான ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க்குகளை உடனடியாகப் பயன்படுத்தி,
கிராமப்புறங்களிலும், 3வது அடுக்கு நகரங்களிலும் தீர்வைச் செயல்படுத்துவதற்கு உதவும். கிராமப்புற இந்தியாவிற்கான சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இந்த பணியில் எங்களுடன் கூட்டு சேர்ந்துள்ள RailTel க்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று கூறினார்.