இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு Student.Comசார்பில் தீபாவளி பொருட்கள் வழங்கப்பட்டன.தூய்மை பெண் பணியாளர்கள் உட்பட 50 பேருக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்பில் இனிப்பு பட்டாசு உள்ளிட்ட பொருட்களை Student.Com சேர்மன் கே. ஷாலிஹ் ரஹ்மான் வழங்கினார்.மேலும் இந்நிகழ்வில் Student.com சேர்மன்கே. ஷாலிஹ் ரஹ்மான் கூறுகையில்.ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அறியாமை என்னும் இருள் நீங்கி கல்வி என்னும் ஒளி வீசப்பட வேண்டும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களின் பிள்ளைகள் மற்றும் பின்தங்கிய சமூகத்தை சார்ந்த மாணவர்கள் நன்கு படித்து அரசு உயர் பதவிகளில் வரவேண்டும் என்றும் அம்மாணவர்களின் உயர்கல்விக்கு Student.Com என்றென்றும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்தார்.ஜாதி ,மதம் உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஏழை,பணக்காரன் என்றில்லாமல் அனைவர்களின் குடும்பங்களிலும்தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காகவே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியினை ஏர்வாடியை சார்ந்த சமூக ஆர்வலர்நல்ல இப்ராஹிம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.