
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 41-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.இன்றைய ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும்.