உலகளவில் கௌரவம் மிக்க அமைப்பான அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தால்மாலஜி (AAO) அமைப்பின் வருடாந்திரக் கூட்டம் சான் பிரான்சிஸ்கோ மாநகரில் மாஸ்கோன் சென்டர் என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் டீ.லயனல் ராஜியின், “உள்படல செயற்கை மாற்றுப்பொருள்” என்ற தலைப்பிலான காணொளிக்கு “பெஸ்ட் ஆஃப் ஷோ” விருது பெற்றார்.
“தி அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆப்தால்மாலஜி” (AAO) என்பது, கண் மருத்துவர்கள் மற்றும் கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள், உறுப்பினர்களாக இடம்பெற்றிருக்கின்ற உலகின் மிகப்பெரிய சங்கமாகும். கண் மருத்துவவியலில் உலக அளவில் முதன்மை நிகழ்வாக இச்சங்கத்தின் வருடாந்திரக் கூட்டம் கருதப்படுகிறது. அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் மருத்துவத்துறையைச் சேர்ந்த மருத்துவர்களும், அறுவைசிகிச்சை நிபுணர்களும் அதிக எண்ணிக்கையில் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்வில் சிறப்பு பேருரைகள், செயல்முறை உக்திகளை பயிற்றுவிக்கும் பயிற்சித் திட்டங்கள் மற்றும் கண் மருத்துவவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய விளக்கங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள், இக்கூட்ட நிகழ்வில் இடம்பெறுகின்றன.
மருத்துவப்பணி மீது தொடர்ந்து காட்டி வரும் அர்ப்பணிப்பு உணர்விற்காகவும் மற்றும் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையையும், கவனிப்பையும் வழங்கி வரும் சிறப்பான செயல்பாட்டிற்காகவும் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் டீ.லயனல்ராஜைப் பாராட்டி இவ்விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.