சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஜவஹர்லால் நேருவின் திருவுருவப்படத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம், துணை மேயர் சாரதா தேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திருமுருகன், பச்சப்பட்டி பழனி, வர்த்தக பிரிவு சானவாஸ், மாநகர பொது செயலாளர் ராஜ்குமார், சாதிக் பாஷா, சேவா தள பிரிவு வெங்கட்ராஜ், விவசாய அணி மாநில பொது செயலாளர் ஆரோக்கியநாதன், விவசாய அணி மாநகர தலைவர் சிவக்குமார், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார் அகமது, ராமன், நடராஜ், கந்தசாமி, மாநகர செயலாளர் சஞ்சய் காந்தி, இளைஞர் காங்கிரஸ் விஜயராஜ், கோவிந்தன், ராஜ்பாண்டியன், அரவிந்த், மாநில ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் பர்வேஸ், டிவிஷன் தலைவர்கள் மாரியப்பன், ராஜா, ஜெயக்குமார், மணி மற்றும் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.