
கோவை மாவட்டம் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் சார்பில் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமை கோவை மாநகர போக்குவரத்து இணை ஆணையாளர் ராஜராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கிவைத்தார்
இது குறித்து டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன் மற்றும் மாநகர போக்குவரத்து இணை ஆணையாளர் ராஜராஜன் கூறுகையில் தமிழ்நாட்டில் 100-க்கு 14 பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோயால் முதலில் பாதிக்கப்படுவது கண்கள் தான்.இந்த பாதிப்பு வெளியில் ஓரளவு தெரியும் உடனே கண் பரிசோதனை மூலம் அதை சரி செய்து கொள்ள முடியும். 1500 ரூபாய் முதல் 2000 வரை கட்டணமாக செய்யக்கூடிய இந்த பரிசோதனைகளை இலவசமாக இன்று முதல் வரும் 10 நாட்களுக்கு தினமும் 100 ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும் மேலும் சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் சாலையை கடக்க முயன்றவரின் மீது வாகனம் மோதி ஒருவர் உயிர் இழந்ததை தொடந்து காவல் துறை விசாரணையின் போது வாகன ஒட்டிக்கு கண் பார்வை குறைபாடு உள்ளதை கண்டுபிடித்தோம்.இதுவே சாலை விபத்திற்கு காரணம் ஆகும் ஆகவே வாகன ஒட்டுனர்கள் ஆண்டிற்கு ஒரு முறை கண்டிப்பாக கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர் இம்முகாமிற்கான சிறப்பான ஏற்பாடுகளை கோயம்புத்தூர் மாநகர போக்குவரத்து உதவி ஆணையாளர் அருள் முருகன், டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் முகமது ஷபாஸ், முதுநிலை ஆலோசகர் டாக்டர் மும்தாஜ், டாக்டர் அனுஷா, டாக்டர் விஜயகுமார், தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின், துணைத் தலைவர் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ மற்றும் மார்கெட்டிங் இணை துணை தலைவர் ரவி குமார், ஆகியோர் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.