ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நம்பியூர் வட்டக் கிளை செயலாளர் கருப்புசாமி பெருமாள் ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் மணிகண்டன் பேசினார் அப்போது
முன் தேதியிட்டு பணிவரன் முறை செய்யப்பட்ட 2923 குடிநீர்திட்ட, தெருவிளக்கு பராமரிப்பு, தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய ஆணை வழங்கிடும்.
அனைத்து நிலை செயல் அலுவலர்கள் தற்காலிக பணிநிமித்தம் அடிப்படையில் நான்கு ஆண்டுகளாக பணிபுரிவதை பண்பலனோடு வரன் முறைப்படுத்தி அரசாணை வழங்கிடுக.
தனித்திறனற்ற குடிநீர் திட்ட தெருவிளக்கு பராமரிப்பு பணியாளர்கள் அனைவருக்கும் 1900 தா ஊதியம் வழங்கும் ஆணை வழங்கிடுக.
தனித்திறன் வாய்ந்த ITI ஐடிஐ கல்வியுடைய பணியாளர்கள் அனைவருக்கும் (பணிவிதிகள் 2023-ன் படி) ஓவர்சியர் பதவி உயர்வு ஆணை வழங்கிடுக.
கீழ்நிலைப்பணியாளர்களில் தகுதியுடைய அனைவருக்கும் அரசாணைகளின் படி 20% அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் பதவி உயர்வு ஆணை வழங்கிடுக.
அனைத்து நிலை செயல் அலுவலர், தலைமை எழுத்தர், உதவியாளர் காலிப் பணியிடங்களை பணப்பலன் சார்ந்த பதவி உயர்வு மூலம் நிரப்பிடுக,
தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அரசு நிலையாக்கப்படாத, பணியிடை காலமான அனைத்து ஊழியர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்க அரசாணை வழங்கிடுக,
20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அனைத்து மணினி பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்திடுக,
அனைத்து பேரூராட்சிகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஒட்டுநர்களை நிரந்தரம் செய்திடுக,
உள்ளாட்சி தணிக்கை துறை மண்டல அலு பலர்களுக்கு செயல் அலுவலர்கள் ஓய்வு பெறும்போது என்ஓசி (NOC )வழங்கும் அதிகாரம் மீண்டும் வழங்கிடுக,
அவுட்சோர்சிங் அரசாணையின் 139-ஐ முழுமையாக ரத்து செய்து பேரூராட்சி பணிகளை அவுட்சோர்சிங் மூலம் மேற்கொள்வதை கைவிடுக.
பேரூராட்சிக்கு இணையாக மக்கள் தொசை நிதி வருவாயிலுள்ள ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்திட உயர் அலுவலர்களை கொண்டு ஆய்வுக்குழு அமைத்திடுக,
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி சங்கர் மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் அருள் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.