வேலூர் மாவட்டம் ,வேலூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட புதிய நீதி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேலூரில் நடைபெற்றது .கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தலைமை தாங்கினார். செயல் தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார் .கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ,மண்டல தலைவர்கள், பலர் கலந்து கொண்டனர். நிருபர்களிடம் ஏ.சி .சண்முகம் கூறியது வேலூரில் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் 52 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன .மேலும் 50 முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவற்றின் மூலமாக கிராமப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்குகிறோம் 200க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது மக்களை தேடி மறுத்தவர்கள் என்று கருத்தை அடிப்படையாகக் கொண்டு கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று இரத்த கொதிப்பு சர்க்கரை உள்ளிட்ட சோதனைகள் செய்து அங்கேயே மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது .மத்தியில் சிறப்புமிக்க ஆட்சி நடத்தும் பிரதமர் நரேந்திர மோடியை 3வது முறையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக வேலூரில் பல பணிகள் செய்து வருகின்றோம். மக்கள், இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு முகாம் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது எனக் கூறியிருந்தார்.