எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.எ. கனி வரவேற்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மழைக்காலத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட வேண்டும்.மழைக்காலத்தில் குளிரில் இருந்து விடுபட மாடுகள் கூட்டம் கூட்டமாக சாலையில் தஞ்சம் அடைவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மாடுபிடி வீர்களைக் கொண்டு பிடிக்க வேண்டும். மாட்டின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நெல்லை மாநகராட்சி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். டிசம்பர் மாதம் 6ஆம் தேதி வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கக் கோரி மாபெறும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மேலப்பாளையத்தில் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா, அப்துல் மஜீத், சிட்டி சேக், மின்னத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டச் செயலாளர் அன்வர்ஷா நன்றி கூறினார்.