கோவை மாவட்டம் இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அரசு வளத்துறை இணைந்து மலைவாழ் மக்களுடன் 8ஆம் ஆண்டு வன தீபாவளி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சிறப்பாக கொண்டாடினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்திற்கு உட்பட்ட அமராவதி அணைப்பகுதியை ஒட்டிய மலை கிராமங்களான கரட்டுபதி, அமராவதி முதலை பண்ணை மற்றும் பாறை என்று அழைக்கப்படும் காட்டு குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வன தீபாவனி விழாவானது சிறப்பாக கொண்டப்பட்டது.இந்திகழ்ச்சியில் அமராவதி வன சரகர் சுரேஷ்  நலைமை தாங்கினார், இந்நிகழ்வில் மலைவாழ் மக்களுக்கு இரத்தினம் கல்லூரி சார்பாக இனிப்பு புத்தாடைகள், காலணிகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சானிடரி நாப்கின் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சரகர்  சுரேஷ் கூறும் போது கல்லூரி மாணவ மாணவிகள் காடுகளை பற்றியும்,காடுகளிலே வாழ்ந்து காடுகளை பாதுகாக்கும் மலை வாழ் மக்களை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியை தொடர்ந்து சுமார் 300 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது  நிகழ்வில் இரத்தினம் கல்லூரியின் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.