மத்திய கல்வி நிறுவனமான திருச்சி என்ஐடியில் மாணவர்களுக்கு பலனளிக்க கூடிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பயிற்சிகள், கருத்தரங்குகள், புதிய கற்றல் தேடல், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை செய்து வருகின்றன.
அந்த வகையில் திருச்சி என்.ஐ.டியில் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான கையெழுத்து இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி மற்றும் டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நூண்ணறிவு ஆகியவற்றில் அதிநவீன ஆன்லைன் பட்டம் பெறுவதற்கான அம்சங்கள் உள்ளன. தனித்துவமிக்க இந்த ஒப்பந்தத்தின் படி அதற்கான வகுப்புகள் 2024 கல்வி ஆண்டில் நடைமுறைக்கு வரும் என திருச்சி என்.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சி என் ஐடி இயக்குனர் அகிலா, மற்றும் இல்லினாய்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் ப்ரோவோஸ்ட் கென்னத் டி. கிறிஸ்டென்சன் ஆகியோர் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.நிகழ்வில் இல்லினாய்ஸ் டெக்கின் பதிவு மேலாண்மை மற்றும் மாணவ விவகாரங்களுக்கான துணைத் தலைவர் மல்லிக் சுந்தரம், அமெரிக்க தூதரகத்தின், முதன்மை வணிக அதிகாரி கேரி அருண், மற்றும் கல்வியாளர்கள், என்.ஐ.டி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
