
திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காயிதே மில்லத் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஏ.முகம்மது முஜாஹித். இவர் திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவில் 14வயதிற்கு உட்பட்ட இளையோர் பிரிவுக்கு நடந்த “டேக்வாண்டோ” போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்று முதலிடத்தைப் பெற்றார். தொடர்ந்து சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
சிறப்பிடம் பெற்ற மேலப்பாளையம் காயிதே மில்லத் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர் ஏ.முகம்மது முஜாஹித்தை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், பள்ளியில் சந்தித்து ஊக்க தொகையை வழங்கி பாராட்டினார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை அமலா, மேலப்பாளையம் மண்டலச் சேர்மன் கதீஜா இக்லாம் பாசில்லா, மேலப்பாளையம் பகுதி திமுக செயலாளர் துபை சாகுல், 45ஆவது வார்டு செயலாளர் சாலி மௌலானா, பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியை கிரிஜா, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் குமார், மாவட்ட திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மானி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைத் தலைவர் ஷேக் மைதீன், வட்டச் செயலாளர் டி.எஸ்.எம்.ஓ. உஸ்மான் மற்றும் பள்ளியின் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.