
சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் (க்ரிவாஸ்’24) வருகின்ற மார்ச் மாதம் 15ம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கல்லூரி மாணவர்களுக்கான புகைப்படம் எடுத்தல், பாடல், ஃபேஷன் ஷோ, நடனம், குறும்படம் போன்று பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு அழைப்புகள் விடப்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கல்லூரி மாணவர்களின் தனி திறன்களை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே இந்த வாய்பினை கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த போட்டிகளின் இறுதி நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளனர் என சோனா கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் கூறினார்.
போட்டியின் விதிமுறைகளை பற்றி முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரேணுகா எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகான (க்ரிவாஸ்’24) போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வின் போது ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செந்தில்வடிவு மற்றும் மாணவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.