
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவு நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அந்த வழியாக வந்த ரயிலை அருகில் வசித்து வரும் சண்முகையா – வடக்குத்தியாள் என்ற வயதான தம்பதியினர் அந்த இரவு நேரத்தில் டார்ச் லைட்டுடன் ஓடி சென்று ரயிலை நிறுத்தி மிகப்பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றினர் இதனை அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டி ரூ 5 லட்சம் பணம் வெகுமதி யாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.