திருவாரூர் மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே கலைவாணன், நகர செயலாளர் வாரை .எஸ். பிரகாஷ் மற்றும் பொறியாளர் அணி தலைவர் ஆர்.வி. எல்.ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்பாளர் இரா.பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வுகளில் திமுக பொறியாளர் அணி சார்பில் மாவட்டம் தோறும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட பொறியாளர் அணி சார்பில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
திருவாரூர் முத்துவேலர் அஞ்சுகம்
அரங்கில் நடைபெற்ற இந்த பேச்சுப்போட்டி விழாவிற்கு , நகர கழக செயலாளர் வாரை.எஸ்.பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் இரா .பிரபாகரன் வரவேற்புரையாற்ற மாவட்ட பொறியாளர் அணி தலைவர் ஆர்.வி.எல்.ரவிச்சந்திரன் தொடக்க உரையாற்றினார் .போட்டியில் வெற்றிபெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கே. கலைவாணன் அவர்கள் சான்றிதழ்களையும் பரிசு மற்றும் கேடயங்களையும் வழங்கி சிறப்பித்தார் .
இந்த போட்டிக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் செந்தில், பாலாஜி, போஜராஜன், விஜயஸ்டாலின், இரா.கி.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போட்டியில் அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வெண்ணியைச்சேர்ந்த நந்தகுமார் முதலிடத்தையும், அதே கல்லூரியை சேர்ந்த மாதவன் இரண்டாம் இடத்தையும், ஏ.ஆர்.ஜே.பொறியியல் கல்லூரி மன்னார்குடி மாணவி அபிநயா மூன்றாம் இடத்தையும் பெற்றனர் .
முதல் மூன்று இடங்களைப் பெற்ற இவர்கள் திருச்சியில் நடைபெறும் அடுத்த சுற்றுக்கு தகுதியான வர்களாக அறிவிக்கப்பட்டு, பாராட்டு பத்திரமும் பரிசு தொகையும் கேடயங்களையும் பெற்றனர் விழாவின் முடிவில் இரா.கி. பிரபாகரன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் ராஜ் என்கிற கருணாநிதி உள்ளிட்ட திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தோழர்கள் , பெற்றோர்கள் பங்கேற்றனர்.
