தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாகயம் மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் அரூரில் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கலந்து கொண்டு, வெல்லும் ஜனநாயக மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயக மாநாட்டில் மக்களின் மக்களின் தேவையை உணர்ந்து, மாநில, மத்திய மற்றும் சர்வதேச அளவிலான பிரச்சனைகள்
குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்குக்கான பிரச்சனைகள் குறித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் தேவைக்காக இந்தியா கூட்டணியை உருவாக்கியவர் விசிக தலைவர் திருமாவளவன் நிச்சயமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணி வெற்றி பெறும்’ ஏனென்றால் தமிழ்நாட்டை விட வடமாநிலங்களில் பாஜகவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தங்களது வலிகளை வேதனைகளை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு தேர்தல் எப்பொழுது வரும் என காத்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருகிறார் வரும்போது மோடிக்கு கேரண்டி என சொல்கிறார். ஆனால் மோடிக்கு யார் கேரண்டி? கடந்த 2014 தேர்தலின் போது ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக சொன்னார்கள். ஆனால் போடவில்லை. அமித்ஷாவிடம் கேட்டால் அவர் ஒரு டுபாக்கூர் என்ற அளவில் பேசிவிட்டு செல்கிறார். அதேபோல் இரண்டரை கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக சொன்னார்கள் அதுவும் கொடுக்கவில்லை. தற்பொழுது பெண்களை அதிகார மையப்படுத்துவதாக பேசுகிறார். ஆனால் அங்கே பாபாஹிம் ராம்தேவ் என்ற சாமியார் அவர்களிடத்தில் இருக்கின்றார் இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இங்கே தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினர் எங்களிடத்தில் வீடியோ வைத்திருக்கிறோம் வீடியோ வைத்திருக்கிறோம் என தெரிவிக்கிறார்கள். இவர்கள் பெண்களை பாதுகாப்பவர்களா?
தமிழ்நாட்டின் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்த காலத்தில் மோடி வரவில்லை கன்னியா தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கில் இருந்தது. அப்பொழுதெல்லாம் மோடி வரவில்லை. மோடி அனுப்பிய குழுவினர், இங்கே நேரில் பார்த்துவிட்டு மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் விரைவாக பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவர் அங்கே அமர்ந்து கொண்டு மீட்பு பணி சரியில்லை என பேசுகிறார். பாஜக முன்பெல்லாம் எம்எல்ஏக்களை கொத்துக்கொத்தாக கட்சியில் சேர்த்து வந்தனர் இப்பொழுது கட்சியை பாஜகவில் சேர்த்து வேலையை செய்து வருகின்றனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு மருத்துவ கல்லூரியில் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளதுஅன்புமணி மீது பாடப்பட்டுள்ள அந்த வழக்கை கைவிட வேண்டும் என்பதற்காக பாஜகவிடும் மண்டியிட்டு கூட்டணி வைத்துள்ளனர். மக்களை அடகு வைத்துள்ள தலைவர்கள் சீட்டுக்காக ரோடு ரோடு ஆக தோட்டம் தோட்டமாக திரிந்து வருகின்றனர் என சட்டமன்ற உறுப்பினர் எஸ்எஸ்.பாலாஜி தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் விசிக்காவில் இணையதளம் மூலம் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்ட பெண்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
