
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்கும் நாள் 10 – 2 – 2025-ம் தேதியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வட்டார மருத்துவர் காயத்ரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது பேசுகையில் திருவெண்ணெய்நல்லூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 1 முதல்- 19 வரை குழந்தைகளுக்கும் 20 முதல்- 30 வரை பெண்களுக்கு குடற்புழு நீக்குதல் மாத்திரை வழங்குவதற்கான ஆலோசனையை ஆசிரியர்களுக்கு வழங்கினர் இதில் மருத்துவர் அக்ஷயா தலைமையாசிரியர் ரவி மற்றும் செவிலியர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்