
வேலூர் மாவட்டம் ,வேலூர் புது வசூர், வெங்கடாபுரம் ,ஜெயின் கார்ஸ் மற்றும் ஆட்டோ சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் மகேந்திரா நிறுவனத்தின் புதிய படைப்பான BE6 , மற்றும் XEV9E எலக்ட்ரிக் கார்ஸ் துவக்க விழா வேலூர் அடுத்த ரங்காபுரம் PNS நக்ஷத்திரா லக்ஸரி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்ரீ நாராயணி மருத்துவமன இயக்குனர் பேராசிரியர் என் .பாலாஜி, வேலூர் நறுவீ மருத்துவமனை நியூரோ சர்ஜன் டாக்டர். பால் டி.ஹென்றி, குளோபல் பொறியியல் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுஹாஸ் வேடுலா, மற்றும் PNS நக்ஷத்திரா லக்ஸரி ஹோட்டல் நிர்வாக இயக்குனர் குகன், அம்பாலால் குழுமத்தின் சேர்மன் ஜவரிலால் ஜெயின் ,ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ,கேக் வெட்டி துவக்கி வைத்தனர். உடன் ஜெயின் கார்ஸ் மற்றும் ஆட்டோ சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சுசில் மேத்தா, நிர்வாக மேலாளர் ஷ்ரே மேத்தா, மகேந்திரா நிறுவனத்தின் CEO திருநாவுக்கரசு, மற்றும் வாடிக்கையாளர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.