
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக்கடன் மேளா 2025 பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது இந்நிலையில் கடன் மேளாவின் துவக்க விழா பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார தலைவர் மீரா பாய் தலைமையில் நடைபெற்றது இதன் சிறப்பு விருந்தினர்களாக வங்கியின் உதவி பொது மேலாளர் அந்தாக்ஷ்ரி கிரடாய் அமைப்பின் துணை தலைவர் அபிஷேக் ஆகியோர் கலந்து கொண்டு வீட்டு கடன் மேளாவை துவக்கி வைத்தனர் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள கடன் மேளாவில் முன்னனி வீடு மற்றும் மனை விற்பனை நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள வீட்டு கடன் மேளா குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் வங்கியின் கோவை வட்டாரத் தலைவர் மீராபாய் கூறுகையில், புதிய வீடு வாங்குதல், கட்டுமானம் அல்லது புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு நிதியளிப்பதில் பிஎன்பி ஹவுசிங் முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்தார் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் முடிந்தவரை குறைந்த மற்றும் மலிவானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வங்கி செயல்பட்டு வருவதாக கூறிய அவர்,வீட்டு கடன் இந்த மேளாவில் 100 கோடி ரூபாய் வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார் இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் பயன்படுத்தி தங்கள் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிட வருகை தருமாறும் அவர் கேட்டு கொண்டார்..