![2](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/2-1-1024x1536.jpg)
காதலர் தினம் என்பது காதலைக் கொண்டாடுவது மட்டுமல்ல, ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அக்கறையை
பரிமாறிக் கொள்வதாகும். பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பரிசை விட உங்கள் பாசத்தை வெளிப்படுத்த
வேறு என்ன சிறந்த வழியாக இருக்க முடியும்? இந்த வருட காதலர் தினத்தில், வழக்கமான பரிசுகளைத் தாண்டி,
நல்ல ஆரோக்கியமான கலிபோர்னியா பாதாமை பரிசாக வழங்குங்கள். கலிபோர்னியா பாதாம் சுவையான
மொறுமொறுப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய
ஊட்டச்சத்துக்கள் உள்ளது, எனவே அதை நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசாக வழங்குவதன் மூலம்
அவர்களின் ஆரோக்கியத்தில் நீங்கள் கொண்டுள்ள அக்கறையை அது வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.15
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கலிபோர்னியா பாதாமில், வைட்டமின் ஈ, மெக்னீசியம், நார்ச்சத்து,
ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் புரதச் சத்து ஆகியவை உள்ளன. “பருப்புகளின் ராஜா” என்று அழைக்கப்படும்
இந்த பாதாமில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பாதாமை நீங்கள் வழக்கமாக சாப்பிடும்போது,
அது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எடை மேலாண்மையை ஆதரிக்கவும், நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. கலிபோர்னியா பாதாம் எந்தவொரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும்
எளிமையான ஆனால் சக்திவாய்ந்த உணவு என்றும், அதில் ஏராளமான நன்மைகள் உள்ளன என்றும் 200க்கும்
மேற்பட்ட அறிவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. புதுடெல்லி மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் உணவுமுறைப்
பிரிவின் பிராந்தியத் தலைவர் ரித்திகா சமதர் கூறுகையில், நமது தினசரி உணவில் பாதாம் போன்ற இயற்கை
உணவுகளை நான் எப்போதும் பரிந்துரைக்கிறேன், ஏனெனில் அதில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட 15
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீரிழிவு மற்றும் கொழுப்பு உள்ளிட்ட நோய்களை கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருப்பதில் இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உண்மையில், கார்போஹைட்ரேட் நிறைந்த
உணவுகளை நாம் சாப்பிடும்போது ரத்த சர்க்கரை தாக்கத்தைக் குறைக்கவும், உண்ணாவிரத இன்சுலின் அளவில்
எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதாம் பாதுகாக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று தெரிவித்தார்.
ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி கூறுகையில், பாதாம் ஆரோக்கியத்திற்கான ஒரு
சிறந்த பரிசாகும், இதில் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சில வைட்டமின்கள் மற்றும்
தாதுக்கள் உட்பட 15 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நமது உணவுமுறை நாம் எப்படி இருக்கிறோம்
என்பதைப் பிரதிபலிக்கிறது என்பதை நான் எப்போதும் வலியுறுத்துகிறேன், அதனால்தான் பாதாம்
போன்றவற்றை நமது உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறேன். பாதாமை எந்த நேரத்திலும் சாப்பிடலாம்.
இதை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, அது இதய ஆரோக்கியம், எடை மேலாண்மை மற்றும் சரும
ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது என்று தெரிவித்தார். தோல் மற்றும் அழகுசாதன நிபுணர் டாக்டர் கீதிகா
மிட்டல் கூறுகையில், காதலர் தின பரிசாக பல்வேறு சுவைகளில் பாதாம் பருப்புகள் கிடைக்கின்றன.
மொறுமொறுப்பான, இயற்கையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது
உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும்
வைட்டமின் ஈ (ஆல்பா-டோகோபெரோல்) நிறைந்துள்ளன, அவை நமக்கு வயதான தோற்றம் வராமல்
பாதுகாக்கிறது. உண்மையில், உங்கள் உணவில் தொடர்ந்து பாதாம் எடுத்துக் கொள்ளும்போது, அது சூரிய ஒளி
பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்று தெரிவித்தார்.