தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகன் ராஜன் ஆலங்குளத்தில் வாரிசு இல்லாமல் இறந்தவரின் 38 சென்ட் நிலத்தை மீட்டு அதனை அரசுடைமையாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
ஆலங்குளம் வார்டு எண்-1ல் கருப்பசாமி கோவில் அருகில் மாசிலாமணி என்பருக்கு அபுச எண் 686/2B2 சுமார் 38 செண்ட் காலிமனை இருந்தது. ஷை சொத்தின் உரிமையாளருக்கு சட்டப்படியான வாரிசுகள் ஏதுமில்லை. அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வயோதிகம் காரணமாக இறந்துவிட்டார். ஷை சொத்து 30 ஆண்டுகளாக எவ்வித பாத்திய உரிமையும் கோரப்படாமல் கேட்பாரற்று கிடந்தது. இந்நிலையில் ஷை சொத்தைப்பற்றி தெரிந்து கொண்ட ஷை எதிரிகள் அனைவரும் கூட்டு சேர்ந்து சதித்திட்டம் தீட்டி ஷை சொத்திற்கு யாதொரு சட்ட பின் தொடர்ச்சி வாரிசுகள் ஏதுமில்லை என நன்கு தெரிந்தும் ஷை சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு, சதித்திட்டம் தீட்டி கூட்டுச் சேர்ந்து ஷை சொத்தில் தங்களுக்கு ஆலங்குளம் சார்பதிவக மோசடி கிரைய ஆவண எண்கள் மூலம் கேட்பாரற்று கிடந்த சொத்தை வாரிசுகள் ஏதுமில்லா சொத்து அரசுக்கு பாத்தியப்பட்ட சொத்து என்று நன்கு தெரிந்தும் மோசடி ஆவணங்கள் மூலம் தங்களுக்குள் பத்திரப்பதிவு செய்து வாரிசு இல்லா சொத்தை அபகரிக்க முயற்சி செய்த மேற்படி எதிரிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்திடவுடம் மேற்படி மோசடி பத்திர ஆவணங்களை ரத்து செய்திடவும் பட்டா எண் 2102ஐ ரத்து செய்திடவும் வேண்டி நான் கடந்த 06.11.2024 அன்று தங்களுக்கும், கோட்டாட்சித்தலைவர் தென்காசி மாவட்ட தலைமை சார்பதிவாளர் தென்காசி, தாசில்தார் அவர்கள் ஆலங்குளம், சார்பதிவாளர் அலுவலகம் ஆலங்குளம் , காவல் உதவி ஆய்வாளர் ஆலங்குளம் (எதிரிகளுக்கும் தகவலுக்காக) பதிவுத்தபாலில் நான் புகார் மனு அனுப்பி இருந்தேன். மேற்படி மனு மீது மேல் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், மேற்படி புகார்மனு மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் WP (MD) No 329/2005ன் படி ஒரு ரிட் மனு தாக்கல் செய்து மேற்படி மனு ஏற்கப்பட்டு 07.01.2025ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேற்படி உத்தரவில் 12 வாரங்களுக்குள் மேற்படி மனுசம்மந்தமாக உரிய மேல் நடவடிக்கை எடுத்து தகவல் தெரிவிக்குமாறு தங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. மேற்படி உத்தரவின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சொத்தின் உரிமையாளர் இறந்தால் வாரிசுகள் ஏதும் இல்லாத நபரின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது, என்று நன்கு தெரிந்து ஷை எதிரிகள் கூட்டு சேர்ந்து சதித்திட்டம் தீட்டி ஷை வாரிசு இல்லா சொத்தை மோசடியாக பத்திரப்பதிவுகள் செய்துள்ளனர்.
ஆகவே சமூகம் அய்யா அவர்கள் ஷை எதிரிகள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த ஷை ஆலங்குளம் சார்பதிவக அ.பு.சர்வே எண் 689/2B2-ல் உள்ள செண்ட் இடத்தை வாரிசு இல்லா சொத்தை அரசுடைமை ஆக்கிட தகுந்த மேல் நடவடிக்கை எடுத்திடவும், ஷை மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுபடி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது