![5](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/5-1024x593.jpg)
கோவை மாவட்டம் உழவர் பெருந்தலைவர் நாராயண சுவாமி நாயுடு அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னூர் எஸ் எஸ் குளம் ஒன்றியத்திற்குட்பட்ட வையம்பாளையத்தில் உள்ள மணிமண்டபத்தில் நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாய கண்காட்சி மற்றும் மாநில அளவிலான மாநாடு நடைபெற்றது.இது குறித்து நிர்வாகிகள் தெரிவிக்கையில் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் அமைத்துள்ள பகுதியில் வளைவு அமைக்க வேண்டும் மேலும் இந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் இரயில்வே பாலத்திற்கு நாராயணசாமி நாயுடு பெயர் வைக்க வேண்டுமென்று தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தனர் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கே.சுந்தரம்,மாநில பொருளாளர் எம்.பாண்டியன்,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ராஜா சிதம்பரம் கோவை மாவட்ட தலைவர் ஏர்வேந்தர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் டாக்டர் ஜி.ரங்கநாதன் மாவட்ட ஆலோசகர் கே.ஆர்.ஜெகநாதன் மாநகரத் தலைவர் ஞானசுந்தர் , மாநகர செயலாளர் காளி சாமி,மகளிர் அணி தலைவர் மகாலட்சுமி , மாநகர் மகளிர் அணி அமைப்பாளர் செல்வி பிரீத்தி, பிளிச்சி அமைப்பாளர் மருதாச்சலம்,பெரியநாயக்கன்பாளையம் அமைப்பாளர் கண்ணன், எஸ் எஸ் குளம் அமைப்பாளர் பி ரவிச்சந்திரன் எஸ் எஸ் குளம் கிழக்கு அமைப்பாளர் இளையராகவன், மேட்டுப்பாளையம் மேற்கு மற்றும் கிழக்கு அமைப்பாளர்கள் கணேஷ்குமார், சத்தியநாராயணன்,கிணத்துக்கடவு அமைப்பாளர் ஈஸ்வரன் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.