
சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் எட்டாம் ஆண்டின் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் கண்களையும், கருத்துக்களையும் கவரும் வண்ணம் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன் திறமையை வெளிப்படுத்தினர்.நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு விருந்தினராக central board of Excise and Customs Tamilnadu cricket player TNPL சேலம் Spartans விவேக் ராஜ் அவர்கள் வருகை புரிந்து மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை மற்றும் ஊக்குவிப்பை மேம்படுத்தும் விதமாக உரையாற்றினார். மேலும் சுற்றுச்சூழலைப் பேணும் விதமாக மரக்கன்றுகளையும் பள்ளிக்குப் பரிசளித்தார். மேலும் இவ்விழாவில் சைதன்யா டெக்னோ பள்ளி Head of Operations Tamilnadu ஹரிபாபு அவர்களும், பள்ளியின் துணைப்பொது மேலாளர் வெங்கட கிருஷ்ணா ரெட்டி அவர்களும் ,பள்ளியின் முதல்வர் மாலதி ராஜா, பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.