
டெல்லியில் இந்திய எரிசக்தி வாரம் 2025 மாநாடு நேற்று துவங்கி வரும் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 2047-
ம் ஆண்டுக்குள் எரிசக்தி சுதந்திரம் மற்றும் 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தில் நிகர பூஜ்ஜியம் என்ற
இந்தியாவின் இலக்கிற்கு தனது பங்களிப்பை வழங்கும் வகையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம்
கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்து மற்றும் உற்பத்திக்கு உறுதி அளித்துள்ளது. எரிசக்தி தன்னிறைவை
அடைவதற்கும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் நடைமுறை மற்றும் சுத்தமான எரிசக்தி தீர்வுகளை
வழங்குவதற்கும் இந்திய எரிசக்தி வாரம் 2025 கடைபிடிக்கப்படுகிறது. இதில் உலகளாவிய அரசியல் தலைவர்கள்,
கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனைத் தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் பயனாளர்கள் ஆகியோர் பங்கேற்று எரிசக்தி
சூழ்நிலை, தொழில்நுட்பங்கள், தொழில்துறை போக்குகள் மற்றும் கொள்கை கண்ணோட்டம் ஆகியவை குறித்து
விவாதிக்கின்றனர். காலத்தின் தேவையை பிரதிபலிக்கும் வகையில், இதில் பசுமை ஆற்றலால் இயக்கப்படும்
சுற்றுச்சூழல் மாசில்லாமல் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தனது வாகனங்களுக்கான பல்வேறு என்ஜின்களை
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் காட்சிப்படுத்தியது. வாகனங்கள் பெட்ரோலிய எரிபொருட்களைச்
சார்ந்திருப்பதைக் குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் உதவும் மின்மயமாக்கல் மற்றும் மாற்று
எரிபொருட்கள் குறித்தும் இந்நிறுவனம் விளக்கிக் கூறியது. இந்தியாவின் எரிசக்தி தேவை, பலதரப்பட்ட நுகர்வோர்
மற்றும் அவர்களின் தேவைகள், உள்கட்டமைப்பு தயார்நிலை மற்றும் அரசாங்கத்தின் ‘ஆத்ம நிர்பர்’ தொலைநோக்குப்
பார்வை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ‘மேக் இன் இந்தியா’வை மையமாகக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு
பாதிப்பில்லாத தூய்மை தொழில்நுட்பங்களை உருவாக்க இந்நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேற்கண்ட
கண்ணோட்டத்தின் அடிப்படையிலான தனது தயாரிப்புகள் குறித்து இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தியது. ஹைபிரிட்
மின்சார வாகனம்: இன்னோவா ஹைக்ராஸ் கார் ஹைபிரிட் மின்சார தொழில்நுட்பத்தையும், 20 சதவீதம் எத்தனால்
மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் மூலம் இயங்கும் திறனையும் கொண்டது. ப்ளெக்ஸ்-எரிபொருள் பிளக்-இன் ஹைப்ரிட்
எலக்ட்ரிக் வாகனம்: மின்சாரம் மற்றும் எத்தனால் ஆகிய இரண்டு நன்மைகளை 100% வரை இணைக்கும் ப்ரியஸ்
அம்சத்தைக் கொண்டுள்ளது, இதன் மூலம் இயங்கும் வாகனங்கள் மிகக் குறைந்த கார்பனையே
வெளியேற்றும்.பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகனம்: முழுமையாக மின்சாரம் மூலம் இயங்கும் வாகனம்.
எரிபொருள் செல் மின்சார வாகனம்: எதிர்கால எரிபொருளாக ஹைட்ரஜனால் இயக்கப்படும் மிராய் கார். மின்சார
வாகன துணை அமைப்பு: உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இ-டிரைவ், அனைத்து மின்மயமாக்கப்பட்ட
வாகனங்களுக்குமான பொதுவான பவர்டிரெய்ன். இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரித்து
வரும் புதிய வாகன விற்பனையைக் கருத்தில் கொண்டு, முழு அளவிலான மின்மயமாக்கப்பட்ட வாகனங்கள் மற்றும்
மாற்று எரிபொருள் சார்ந்த தொழில்நுட்பங்கள் உட்பட அனைத்து தூய்மை தொழில் நுட்பங்களும் காலத்தின்
கட்டாயமாக உள்ளது. இந்த சூழலில், எத்தனால் ஒரு உள்நாட்டு மற்றும் சுத்தமான எரிசக்தி ஆதாரமாக இருப்பதால்,
பெட்ரோலி எரிபொருள் பயன்பாடு, எரிசக்தி இறக்குமதி செலவு மற்றும் கார்பன் வெளியேற்றத்தை கணிசமாகக்
குறைக்க முடியும் என்பதால், இந்தியாவிற்கு உடனடி நன்மை அளிக்கும் மிகப்பெரிய ஆற்றலை எத்தனால்
கொண்டுள்ளது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால், எத்தனாலை எரிபொருளாக அதிக
அளவில் பயன்படுத்துவது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளையும்
உருவாக்கும், இதன் மூலம் உபரி சர்க்கரை மற்றும் உணவு தானியங்களிலிருந்து அரசாங்கத்திற்கு வருவாயை
அதிகரிப்பதோடு கிராமப்புற பொருளாதாரமும் மேம்படும். தற்போது எரிக்கப்படும் விவசாய கழிவுகளில் இருந்து
எத்தனால் தயாரிப்பதற்கான இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பங்களை அரசாங்கம் சமீபத்தில்
அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடுமையான காற்று மாசுபாட்டைத் தடுப்பது மட்டுமல்லாமல், கழிவுகளிலிருந்து
வருமானத்தை ஈட்டவும் உதவும்.