
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட இடையகோட்டை கிராமம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜமீன் சமஸ்தானமான விழங்கியது. அந்த காலகட்டத்தில் அப்பகுதியில் ஜீவசமாதி அடைந்த சித்தருக்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா அன்று சுவாமி சித்தருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதை அப்பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்
இடையகோட்டையில் ஜமீன்தார் காலத்தில் கட்டபட்ட அரண்மனை இன்றும் கம்பிரமாக உள்ளது. ஜமீன் வாரிசுதாரர் சரவணன் அவருடைய குடும்பத்தினர் மற்றும் இடையகோட்டை வியாபாரிகள் ஒருங்கிணைந்து ஜீவசமாதி அடைந்த சித்தருக்கு தேங்காய் பழம் சர்க்கரைப் பொங்கல் சுண்டல் போன்ற நெய்வேத்தியங்கள் படையலிட்டு சுவாமி சித்திரை ஆண்டுதோறும் வழிபடுகின்றனர்.
இங்கு சுவாமி சித்தரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் உடனடியாக நடப்பதாகவும் பல அதிசயம், சுபகாரியங்கள் கை கூடி வருவதாகவும் பொதுமக்களும் அங்கிருக்கும் வியாபாரிகளும் கூறுவது நம்மை ஆச்சரியப்பட செய்கிறது.
இந்த சிறப்பு சுவாமி சித்தர் வழிபாட்டில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சித்தர் ஜீவசமாதியில் சிறப்பு வழிபாடுகள் செய்து சித்தரின் அருளை பெற்றுச் சென்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக வி.சி.க வடிவேல் கலந்து கொண்டார் அதுமட்டுமின்றி இடையகோட்டை சுற்றியுள்ள கிராம மக்களும் ஆன்மீகப் பெரியோர்களும் கலந்து கொண்டு சுவாமி சித்தர் ஜீவ சமாதியில் சிறப்பு வழிபாடு செய்தனர்.