
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமான குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் தெப்பத் உற்சவ திருவிழா கோலாகல கொண்டாட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
குற்றாலநாத சுவாமி திருக்கோவில் ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ திருவிழா பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபை எதிரே உள்ள தெப்பக்குளத்தில் உற்சவ திருவிழா நடைபெற்றது.
தெப்ப உற்சவ திருவிழாவை முன்னிட்டு இலஞ்சியிலிருந்து வள்ளி தெய்வானையுடன் திருவிலஞ்சி குமாரர் குற்றால நாதசுவாமி கோவிலுக்கு காலை அழைத்து வரப்பட்டார். பின்னர் மாலையில் குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்மன், திருவிலஞ்சி குமரன் வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்ப உற்சவ தேரில் எழுந்தருளி நீராழி மண்டபத்தை 11 முறை சுற்றி வரும் வைபவம் நடைபெற்றது.
இதில் தென்காசி, மேலகரம் காசிமேஜபுரம், குடியிருப்பு நன்னகரம், மேலாரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர் இவ்விழாவைக் காண வந்த அனைத்து பக்தர்களுக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.