
கீழகோணம் பகுதியில் வசித்து வரும் சேவியர் என்பவர் நேற்று மாலை குளிப்பதற்காக அருகிலுள்ள குளத்திற்கு சென்றுள்ளார். குளிக்க சென்றவர் நெடு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரின் உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்தபோது குளக்கரையில் அவரின் இருசக்கர வாகனம் நிற்பதை கண்டு அவர் குளத்தில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குளத்தில் இறங்கி தேடியுள்ளனர் அவர் கிடைக்காத நிலையில் தீயணைப்புத் துறையினருக்கும், ஆசாரிபள்ளம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இரவு வரை தேடியும் அவர் கிடைக்காததால் தேடுதல் பணியை மீண்டும் இன்று காலை தொடங்கினர். பல மணி நேரம் தேடி மாலை 3 மணி அளவில் தண்ணீருக்குள் மூழ்கி பலியாகி கிடந்த அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.