செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரிலுள்ள தனியார் பள்ளி இலயோலா அகாடெமி சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி சார்பில்) “போதையில்லா உலகம் படைப்போம் மனித உயிர்களை காப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று போதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பிக் கொண்டும் பலகங்களை இயங்கிக் கொண்டும் நாடகங்கள் நடத்திக்காட்டியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இவ்விழிப்பணர்வு பேரணியை மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜே.சண்முகம் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் திருமதி சித்ரா கமலக்கண்ணன்/தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் திரு சிவகுமார் மற்றும் மறைமலைநகர் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் திரு ஹேமத்குமார் ஆகியோர்கள் மறைமலைநகர் நகர மன்ற அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர் மேலும் இப் பேரணியில் இலயோலா அகாடமி நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் உடன் உழைப்பாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர் .
