
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுக்கா வெடியங்காடு புதூர் பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் கடந்த கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று காலை ஏற்பட்ட பழுதினை நீக்க, அப்பகுதியில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த பணியாளர் பெரிய ராமாபுரத்தைச் சேர்ந்த ரகுபதி (வயது 25) என்பவர் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி பலியானார். இவரது குடும்பத்தார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களிடம் (11.02.2025) அன்று நிவாரணம் கோரி மனு அளித்ததை தொடர்ந்து, மின்சாரத்துறை அமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு நிவாரணம் வழங்க கோரியதற்கிணங்க, இறந்தவரின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் நிவாரணம் ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.. மேலும்அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1. லட்சம்ரொக்க பணம் இராணிப்பேட்டை விசுவாஸ் பள்ளி தலைவர் கமலாகாந்தி அவர்களுடன் நேரில் வந்து குடும்பத்தாருக்கு வழங்கி ஆறுதல் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம் (மின்சாரத்துறை) மேற்பார்வை பொறியாளர் சேகர், திருத்தணி செயற்பொறியாளர் பாஸ்கர், ஆர்.கே.பேட்டை உதவி செயற்பொறியாளர் செந்தில், மற்றும் .மணி, பழனி. ஸ்ரீதர், கௌஷிக் பொதுமக்கள் உடனிருந்தனர்…