
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பாக மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எ. கனி தலைமையில் “வக்பு திருத்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது” எனக்கூறி மேலப்பாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் இம்ரான் அலி வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா தொடக்க உரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் வர்த்தகர் அணி மண்டலத் தலைவர் ஹயாத், தொழிற்சங்க மண்டலத் தலைவர் ஹைதர் இமாம், நிர்வாகிகள் சேக் இஸ்மாயில், சேக் முகம்மது பயாஸ், வழக்கறிஞர் முபாரக் அலி, சிட்டி சேக், சலீம் தீன் உள்பட பலர் பங்கேற்றனர்.இறுதியாக மாவட்ட பொதுச் செயலாளர் அன்வர்ஷா நன்றி கூறினார்.