
ஆர்.கே. பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம்கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட திட்ட பணிகள் மற்றும் புதிய வளர்ச்சி பணிகளுக்கு பூஜை நடத்தியும் திருத்தணிஎஸ்.சந்திரன் எம். எல். ஏ .துவக்கி வைத்தார். இங்குள்ள சுப்ரமணியர் குளம் நீர் ஆதாரம் வேண்டி இதை தூர்வார வேண்டுமென முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில்எஸ். சந்திரன் எம். எல். ஏ .எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் பரிந்துரையின் பேரில் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. மேலும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் காரியமேடையும் அமைக்கப்பட்டது. இதை எஸ். சந்திரன். எம் எல் ஏ திறந்து வைத்தார் மேலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்.ரூ.13.26 லட்சம் செலவில் குளத்தை சுற்றி பேவர் பிளாக் சாலை மற்றும் பைப் லைன் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடத்தி துவக்கி வைத்தார். ஒன்றிய ஆணையர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் ( கிராம ஊராட்சி) ஒன்றிய பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள்.சி.எம். சண்முகம்.பி. பழனி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சூர்யா. மேற்பார்வையாளர் நெடுஞ்செழியன் மற்றும் திலகவதி ரமேஷ்.மோகன்.ம.ரகு. மீசை வெங்கடேசன். உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.