
oppo_2
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சார்பு நீதிமன்றத்தின் வளாகம் முன்பு பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கருப்பு தின அறிவிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த 2009 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் தமிழக காவல்துறையினர் அது மீறி நுழைந்து அங்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,நீதிமன்ற ஊழியர்களை கொலைவெறி தாக்குதல் நடத்திய தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறையை கண்டிக்கும் வகையிலும்,தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை leஎடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராஜா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் ஐசக் சாமுவேல்,நெடுஞ்செழியன், ஜவஹர் துரை,சங்க தலைவர் பார்த்தசாரதி,பொருளாளர் ஜெயகாந்தன்,துணைத் தலைவர்கள் எம்.தேவராஜ்,ஏலியம்பேடு ப.மதன்,இணை செயலாளர்கள் ஆர். சிலம்பரசன்,கோ.ஜவஹர்,விளையாட்டுத்துறை செயலாளர்கள் எம்.சங்கர்,கே.கவியரசன், நூலகர் ராம்கி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.