
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாதம்பட்டு பேருந்து நிறுத்தம் சித்தூர் -கடலூர் சாலையில் மினி டெம்போவில் 24 சாக்கு மூட்டையில் 182 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கூல் லிப்,விமல் பாக்கு ஹான்ஸ் கடத்தி வந்த கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த சேத்தன் (35) த/பெ விஜயகுமார் அவினாஷ் (30) த/பெ கங்கரங்கையா ஆகியோரிடம் இருந்த வாகனம் மற்றும் போதை பொருட்களை காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில் தனிப்பிரிவு காவலர் ஜானகிராமன் தலைமை காவலர்கள் ஹரிகிருஷ்ணன் நீலகண்டன் வீரராஜ் உள்ளிட்ட போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து இருவரையும் சிறையில் அடைத்தனர்