
வேலூர் மாவட்டம் ,பன்னாட்டு லயன்ஸ் சங்கம் ,வேலூர் ஸ்மார்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் ,வேலூர் ஹோம் கேர் மற்றும் பானு பிரியா ஹோமியோ கிளினிக் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் லயன் தலைவர் டாக்டர் ஆல்பியாஸ் ஜெயச்சந்திரன் ,லயன் செயலாளர் இனிகோ நான்சி ,லயன் பொருளாளர் இந்துமதி கார்த்திக், ஆகியோர் முன்னிலையில் வேலூர் ஆரணி ரோடு பானு பிரியா ஹோமியோ கிளினிக்ல் நடைபெற்றது. முகாமில் சர்க்கரை இரத்த அழுத்தம், பசியின்மை, பித்தப்பை கல், முதுகுத்தண்டு வலி ,முடக்குவாதம், ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர் .உடன் ஸ்ரீ கணபதி ஏஜென்சிஸ் கால்நடை மருத்துவம் கே .ஆர் .ரகுநாதன், மித்ரா ஹோமியோ பார்மசிஸ் ஆர் .பூர்ணிமா, முகாம் ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின், வேலூர் ஹோம்கேர் சுஜின் செவிலியர், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.