
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதி மாநகராட்சி 37- வது வார்டுக்கு உட்பட்ட நஞ்சப்பன் வீதி, மருதாபுரம் பகுதியில் கடந்த ஐந்து தலைமுறைக்கு மேலாக வசித்து வரும் ஊர் பொதுமக்கள் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது 1978-ம் ஆண்டு எங்கள் பகுதிக்கு 60-க்கு மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.பட்டா வழங்கி 48 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் இந்த பட்டா வினை பதிவு செய்ய மறுக்கப்படுகின்றது 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்து வந்த மக்களின் தேவைக்காக 150 அடி கிணறு அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது மேலும் அரசாங்கத்தால் 20 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது சில வீடுகளுக்கு பசுமை வீடு கட்டுவதற்கு அரசாங்கத்தால் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது அவினாசி கூட்டுறவு வங்கியில் இந்த பட்டாவிற்கு கடன் உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதிக்கு பாதாள சாக்கடை வசதி ஒவ்வொரு வீட்டிற்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது அரசின் உதவியுடன் மின்சார வசதி குடிநீர் இணைப்பு வசதி சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது வீட்டு வரி குடிநீர் வரி செலுத்தி வருகிறோம் எனவே நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம் எங்களுடைய வருமானம் குடும்ப வாழ்வாதாரத்திற்கே போதுமானதாக இல்லை எனவே நீண்ட காலமாக குடியிருந்து வரும் எங்களுக்கு அரசு சார்பில் நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்கி பத்திரபதிவு செய்திட வேண்டும் என்று தெரிவித்தனர்