
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில் நேற்று மாதாந்திர நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் குல்சார் அகமது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆணையர் பயணி முன்னிலை வகித்தார் கூட்டம் தொடங்கிய போதே அதிமுகவை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் ஜமுனாராணி, லட்சுமி சோமசுந்தரம், அமிதாபானுசேட்டு திமுக நகர மன்ற உறுப்பினர்கள் பொடிக்காரர், முகமது காதர், முகமது ஜியாவுதீன், நஜி முனிஷா, அப்துல் அலிம், சல்மாபானு, அக்பர், கோபிநாத் ஆகியோர் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு நகர மன்ற கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்கை அடங்கிய மனுக்களை ஆணையர் பழனியிடம் கொடுத்து வெளிநடப்பு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது மறைந்த முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ் டி.அமீன் உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் அரவணைத்து சென்றார். தற்போது உள்ள நகர மன்ற பொறுப்புத் தலைவர் குல்சார் அஹமத் தனக்கு சாதகமான நான்கு நபர்களை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதை மட்டுமே தீர்மானத்தில் நிறைவேற்றுகிறார்.
வார்டில் உள்ள குறைபாடுகளை கோரிக்கை வைத்தாலும் கண்டு கொள்வதில்லை. அதிகாரிகள் கள ஆய்வு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனி நபரின் தலையீடு அதிகமாக உள்ளது அவர் வைப்பதுதான் சட்டமாக இருக்கிறது. அவர் எதைக் கூறினாலும் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது, யார்? நகர மன்ற தலைவர் என்பதே தெரியவில்லை , வார்டுகளில் எந்த வேலைகயும் நிறைவேற்றாததால் பொதுமக்கள் கவுன்சிலர்களை விமர்சிக்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றும் நிறைவேற்ற முடியவில்லை என்று கூறினர். அதனைத் தொடர்ந்து நகர மன்ற தலைவர் குல்சார் அகமது பேசும்போது, அனைத்து வார்டுகளிலும் எல்லா வேலைகளும் நடைபெற்று வருகிறது,
வேண்டுமென்றே என் மீது குற்றம் சாட்டுகின்றனர், அனைத்து வார்டுகளிலும் நிறைவேற்றிய வேலைக்குரிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றார் நகர மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததற்கு வாட்டில் உள்ள பிரச்சனைகள் தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்று ஆணையர் பழணியிடம் கேட்டபோது அதற்கு அவர் நீங்கள் அரசியல்வாதிகளிடம் தான் கேட்க வேண்டும் என்று தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டார்.
இந்த சம்பவத்தால் மேல்விஷாரம் நகர மன்ற அலுவலகத்தில் சற்று பரப்பரப்பு ஏற்பட்டது.