
கோவை மாவட்டம் போத்தனூர் கதிரவன் நகர் ரெசிடெண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் தலைவர் மன்சூர் அஹமது தலைமையில் செயலாளர் சையது இப்ராகிம் பொருளாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி மாநகராட்சியை கண்டித்து திடீர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது போத்தனூர் அம்மன் நகரில் உள்ள 30 அடி அகல சாலை வழியாக பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஆரம்ப சுகாதார நிலையம் பள்ளி கல்லூரிகள் போன்ற பிரதான இடங்களுக்கு சென்று வர அம்மன் நகருக்கு பின்புறம் உள்ள போத்தனூர் கதிரவன் நகர் உதயம் நகர் மற்றும் எலைட் அவின்யு குடியிருப்புகளில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பல காலமாக பயன்படுத்தி வந்த 30 அடி அகல சாலையை சில சுயநலவாதிகளின் தூண்டுதலாலும் தவறான வழிகாட்டுதலாலும் எந்தவித விசாரணையுமின்றி 30 அடி அகல சாலையின் இருபுறமும் உள்ள ரிசர்வ் சைட்டை பாதுகாக்கும் பொருட்டு வேலி அமைப்பதாக தெரிவித்து எந்தவித முன்னறிவிப்புமின்றி மாநகராட்சியினர் வேலியிட்டு அடைத்துவிட்டனர் மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த சாலையை திறந்து விட மறுக்கின்றனர் மாநகராட்சியில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் நேரடியாக மனு கொடுத்தும் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு இந்த பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர் மேலும் இந்த பாதையை திறந்துவிடாத பட்சத்தில் எங்களுடைய ஆதார்கார்டு,குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என்று தெரிவித்தனர்