
மண்டபம் பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவுப்படி, பேரூராட்சிகளின் சிவகங்கை மண்டல உதவி இயக்குனர் சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் படி மண்டபம் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து மணடபம் பேரூராட்சி செயல் அலுவலர் செ.மாலதி, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லிங்கவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன், மண்டபம் சுகாதார ஆய்வாளர் சீனி மரைக்காயர், மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் முனியசாமி, மண்டபம் பேரூராட்சி பரப்புரையாளர்கள் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மண்டபம் ரயில்வே பீடர் சாலையில் பழனி கடையில் தடை செய்யப்பட்ட விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த
புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ரூ. 25000 அபராதம் விதித்தனர்