
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம், கல்புதூர் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆலய ஸ்தபகர் மோகனவேல், சித்ரா ,குமுதா ,மற்றும் விழா குழுவினர்கள் ,ஊர் பொது மக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மயான கொள்ளை விழாவில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்