
ரெடிங்டன் இந்தியா, நாட்டின் முன்னணி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனம் ஆகும். பார்ச்சூன் இந்தியா 500 நிறுவனங்களில் ஒன்றான இது, ஹெச்.பி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து போட்டோ மேக்ஸ் டிஜிட்டல் பிரஸ் நிறுவனத்துக்கு 7கே டிஜிட்டல் பிரஸ் வசதியை வழங்கியிருக்கிறது. போட்டோ மேக்ஸ் அமைந்திருக்கும் நாகர்கோவில், கன்யாகுமாரி மாவட்டதில் நீடித்து உழைக்கக்கூடிய – உயர்தரமான – ஏழு வண்ணங்களில் பல்வேறு வகைகளில் புகைப்படம் அச்சிடும் தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் நிறுவனம் .“1940 ஆம் ஆண்டு எனது தாத்தாவின் கனவுகளோடு எங்களது நிறுவனத்தின் பயணம் தொடங்கியது அந்தப் பாரம்பரியத்தைப் புதுமைகளின் துணைகொண்டு பல நூற்றாண்டை நோக்கி நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பரிணாம வளர்ச்சியில் ஹெச்.பி மற்றும் ரெடிங்க்டன் நிறுவனத்துடன் எங்களது உறவு முக்கிய பங்கு வைக்கிறது.2012 ஆம் ஆண்டில் இண்டிகோ 5600 தொழில்நுட்பத்துடன் திருமண ஆல்பங்களை செய்யத் தொடங்கி தற்போது உயர் தரத்திலான புகைப்பட புத்தகங்கள் மற்றும் வணிகரீதியான அச்சு சேவைகளை இண்டிகோ 7கே தொழில் நுட்பத்தில் வழங்குவதுவரை எமது சேவைகளை விரிவாக்கியிருக்கிறோம். இப்புதிய தொழில் நுட்பமானது எங்களது திறன்களை மேம்படுத்துவதுடன் உயர்தரத்தில் பலதரப்பட்ட சேவைகளை வழங்க உதவுகிறது. இது எங்களது துறையில் நாங்கள் முன் நிற்க பெரிதும் கை கொடுக்கிறது” என்றார் போட்டோ மேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரெஜினால்ட் கமல். இந்தியா முழுவதிலும் சிறப்பான தொழில்நுட்பத் தீர்வு வழங்குவதை எங்களது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். அவ்வகையில் போட்டோ மேக்ஸ் நிறுவனத்துடன் தற்போது கைகோர்த்து இருப்பது அதன் அடுத்த கட்ட .முன்னேற்றத்துக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்” என்றார் ரெடிங்டன் நிறுவனத்தின் துணைத் தலைவர் (டிஜிட்டல் பிரிண்டிங் )ரமேஷ் கே .எஸ் அவர்கள் .ரெடிங்டன் மற்றும் போட்டோ மேக்ஸ் நிறுவனங்களுடன் கைகோர்ப்பதன் மூலமாக தென்னிந்தியாவில் அச்சுத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார் எச்பி இந்தியா நிறுவனத்தின் நிறுவன அச்சு வணிகப்பிரிவின் இந்திய பிரிவு தலைவரான ஏ .அப்பாதுரை.